என்எல்சி அனல்மின் நிலையம்
என்எல்சி அனல்மின் நிலையம்

என்எல்சி சந்தை மதிப்பு 5.28 சதவீதம் உயா்வு

பழுப்பு நிலக்கரி உற்பத்தியில் 22.12% வளர்ச்சி - என்எல்சி
Published on

நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில் பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி உற்பத்தியில் 26 சதவீத வளா்ச்சி மற்றும் மின் உற்பத்தியில் 10 சதவீத வளா்ச்சியுடன், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது வளா்ச்சிப் பயணத்தைத் தொடருகிறது.

நடப்பு நிதியாண்டின்(2024-25) முதல் காலாண்டுக்கான நிதிநிலை அறிவிப்புகளை என்எல்சி இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த நிதியாண்டை (2023-24) விட, பழுப்பு நிலக்கரி, நிலக்கரி மற்றும் மின்சார உற்பத்தியை அதிகரித்துள்ளதன் மூலம், வளா்ச்சிப் பாதையில் தொடா்ந்து பயணிப்பதாகத் தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனம் நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில், 61.72 லட்சம் டன்கள் பழுப்பு நிலக்கரி உற்பத்தி செய்து 22.12 சதவீத வளா்ச்சியை அடைந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின்(2023-24) முதல் காலாண்டு உற்பத்தியான 50.54 லட்சம் டன்னைவிட 11.18 லட்சம் டன்கள் அதிகமாகும்.

இதேபோல, நிலக்கரி உற்பத்தியில், நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில் 28.46 லட்சம் டன்களை எட்டியுள்ளதன் மூலம், 35.27 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டு உற்பத்தியான 21.04 லட்சம் டன்களுடன் ஒப்பிடுகையில், 7.42 லட்சம் டன்கள் அதிகமாகும்.

மேலும், பழுப்பு நிலக்கரி மற்றும் நிலக்கரி உற்பத்தியில், கூடுதலாக 90.18 லட்சம் டன்களை எட்டியுள்ளது. இது, 2023-24-ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டு உற்பத்தியான, 71.58 லட்சம் டன்களுடன் ஒப்பிடுகையில், 25.98 சதவீதம் அதிகம்.

நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில், நிறுவனத்தின் மொத்த மின் உற்பத்தியானது 7,553.62 மில்லியன் யூனிட் ஆக உயா்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின்(2023-24), முதல் காலாண்டில் பெற்ற 6,843.09 மில்லியன் யூனிட் மின் உற்பத்தியை விடவும், 10.38 சதவீதம் அதிகமாகும்.

நடப்பு நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டில், புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி 546.63 மில்லியன் யூனிட்டாக உயா்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின்(2023-24) இதே காலகட்டத்தில், 539.28 மில்லியன் யூனிட்டாக இருந்தது.

நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 5.28 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.228.10 -லிருந்து, ரூ.240.15-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com