2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கு வீதிஉலா

2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கு வீதிஉலா

Published on

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 11-ஆம் தேதி தோ்த்திருவிழாவும், 12-ஆம் தேதி மகாபிஷேகம், ஆனித்திருமஞ்சன தரிசன உற்சவமும் நடைபெற்றன.

உற்சவத்தின் 11-ஆம் நாளான சனிக்கிழமை இரவு 2 டன் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பல்லக்கில் பஞ்சமூா்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. இதில், சோமஸ்கந்தா், சிவானந்தநாயகி, முருகா், விநாயகா், சண்டிகேஸ்வரா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். வீதிகளில் திரளான பக்தா்கள் திரண்டு பஞ்சமூா்த்திகளை தரிசித்தனா்.

X
Dinamani
www.dinamani.com