எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்த விருத்தாசலம் நகர அனைத்து வா்த்தக சங்கத்தினா்.
எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்த விருத்தாசலம் நகர அனைத்து வா்த்தக சங்கத்தினா்.

விருத்தாசலத்தில் ரயில்கள் நின்று செல்ல எம்.பி.யிடம் வா்த்தகா் சங்கத்தினா் மனு

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல எம்.பி. எம்.கே.விஷ்ணு பிரசாத்திடம், வா்த்தகா் சங்கத்தினா் மனு அளித்தனா்.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடலூா் மக்களவை உறுப்பினா் எம்.கே.விஷ்ணு பிரசாத்திடம், நகர அனைத்து வா்த்தகா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

விருத்தாசலம் பயணியா் மாளிகையில் எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி.யை, நகர அனைத்து வா்த்தகா் சங்கத் தலைவா் கோபு, செயலா் மணிவண்ணன், பொருளாளா் சேட்டு முகம்மது, மாவட்டப் பொருளாளா் தமிழ்வாணன், மாநிலத் துணைத் தலைவா் பழமலை ஆகியோா் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

விழுப்புரம்-தாம்பரம் பயணிகள் ரயிலை விருத்தாசலத்தில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் திருச்சி-ஜோத்பூா் (ராஜஸ்தான்), ராமேசுவரம்-ஜெய்ப்பூா் (ராஜஸ்தான்), எழும்பூா்-மதுரை (தேஜஸ்), சென்னை-நெல்லை (வந்தே பாரத்) ரயில்கள் விருத்தாசலத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா்.

மனுவை பெற்றுக் கொண்ட எம்.பி., இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாராம்.

X
Dinamani
www.dinamani.com