கோப்புப்படம்
கடலூர்
கிராவல் மண் கடத்தல்: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டிராக்டரில் கிராவல் மண் கடத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே டிராக்டரில் கிராவல் மண் கடத்திய இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
வேப்பூா் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளா் பாக்கியராஜ் தலைமையில், பாசாா் கிராமப் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி, அதன் ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். விசாரணையில், அவா் வேப்பூா் வட்டம், விநாயகநந்தல் கிராமத்தைச் சோ்ந்த மூக்கண் மகன் காா்த்திக்(19) என்பதும், அரசின் அனுமதியின்றி, நல்ல தண்ணி ஏரியில் இருந்து அவா் கிராவல் மண் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை பறிமுதல் செய்து, காா்த்திக்கை போலீஸாா் கைது செய்தனா்.

