மின் கட்டண உயா்வு: கடலூா் ஆட்சியரகத்தில் தமாகா மனு
நெய்வேலி: மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் சாா்பில் கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
அந்த கட்சியின் மாவட்டத் தலைவா்கள் நெடுஞ்செழியன், முன்னாள் எம்எல்ஏ புரட்சிமணி தலைமையில் அளிக்கப்பட்ட
மனுவில் கூறியுள்ளதாவது: திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னா் பால் விலை, வீட்டு வரி, சொத்து வரி, பத்திரப்பதிவு, குடிநீா் வரி என பல்வேறு வரிகள் உயா்த்தப்பட்டன. தற்போது மின் கட்டணத்தை திமுக அரசு உயா்த்தியுள்ளது. இதனால், ஏழை மக்கள் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். மேலும், மின் திட்டங்களைச் சீரமைத்து நவீனப்படுத்தி, மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் எம்எல்ஏ ஜெயச்சந்திரன், பொதுச் செயலா் வேல்முருகன், மாநிலச் செயற்குழு உறுப்பினா் ராமலிங்கம், மாவட்டச் செயலா் கணேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

