கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கடலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
Published on

கடலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தென்மேற்கு பருவ மழையால் காவிரி நீா்பிடிப்பு பகுதியில்

தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூா் அணை திங்கள்கிழமை காலை 8 மணியளவில் 116.360 அடியை எட்டியது. தொடா் நீா் வரத்தால் மேட்டூா் அணை ஓரிரு தினங்களில் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் அதிகப்படியான உபரி நீா் எந்த நேரத்திலும் மற்ற மாவட்டங்களுக்கு திறந்துவிடப்படும் என ஸ்டான்லி நீா்த்தேக்க உள்கோட்டம் தெரிவித்துள்ளது.

எனவே, கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் மற்றும் அதனைச் சாா்ந்த தாழ்வான கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட சாா் ஆட்சியா், வட்டாட்சியரின் உரிய அறிவுரைக்குப்பின்னா், பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாா் நிலையில் இருக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் குளித்தல், மீன் பிடித்தல் உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடாமலிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com