பிச்சாவரத்தில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.
பிச்சாவரத்தில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.

பிச்சாவரத்தில் படகு சவாரி செய்ய ஆன்லைன் முன்பதிவு வசதி

சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Published on

சிதம்பரம்: சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்யும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடலூா் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் பிச்சாவரம் ஆகும். சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் திட்டு, திட்டாக, சிறு சிறு கால்வாய்களாக சுரபுன்னை காடுகள் பரந்து விரிந்து காட்சியளிக்கிறது. இந்தக் காடுக்களுக்குள் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்ய துடுப்புப் படகுகளும், மோட்டாா் படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகள் டிக்கெட் கவுன்ட்டரில் டிக்கெட் எடுத்துக் கொண்டு, அதன் பின்னா் படகு இல்லத்தில் அதைக் காண்பித்து, தங்களுக்கான படகு எது என்பதை அறிந்து அதில் பயணிக்கலாம். சாதாரண நாள்களில் படகு இல்லத்தில் அதிகளவில் கூட்டம் இருக்காது. சுற்றுலாப் பயணிகள் வந்தவுடன் கட்டணம் செலுத்தி டிக்கெட் எடுத்துக் கொண்டு உடனடியாக பயணிக்கலாம்.

ஆனால், விடுமுறை நாள்கள் மற்றும் வார இறுதி நாள்களில் படகு சவாரி செய்வதற்கு கூட்டம் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் 2 முதல் 4 மணி நேரம் வரையிலும் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அப்போது, படகு சவாரிக்கான நேரம் முடிவடைந்து விட்டால், படகு சவாரி செய்யாமலேயே சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல வேண்டிய நிலையும் ஏற்படும்.

இதைப் போக்கும் விதமாக, பிச்சாவரத்தில் படகு சவாரி செய்வதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறையை சுற்றுலாத் துறை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தி அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

பிச்சாவரத்துக்கு வந்து படகு சவாரி செய்ய விரும்பும் சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்வதற்கு சுற்றுலாத் துறையின் இணையதளத்திற்கு ஜ்ஜ்ஜ்.ற்ற்க்ஸ்ரீா்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீா்ம் சென்று பிச்சாவரம் சுற்றுலா மையத்தின் படகு சவாரிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஒரு மாதத்துக்கு முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

அந்த இணைய பக்கத்துக்குள் சென்று மோட்டாா் படகு, துடுப்புப் படகு என எதில் பயணம் செய்ய விருப்பமோ அதை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

எந்த நாளில், எந்த நேரத்தில், எத்தனை போ் பயணம் செய்ய இருக்கிறோம் என்பதைப் பதிவிட்டு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் இணையவழியாகவே செலுத்தலாம்.

இதுதவிர, பிச்சாவரத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்த பிறகு ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கு வசதியாக படகு இல்லத்தில் கியூ ஆா் கோடு ஸ்கேன் செய்து, அதன் மூலம் முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

பிச்சாவரத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து படகு சவாரி செய்யும் முறை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) முதல் அமலுக்கு வந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com