நிறைமாத கர்ப்பிணிக்கு பேருந்திலேயே பிரசவம்
கடலூர்
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு பிரசவம்!
ஓடும் பேருந்தில் நிறைமாத கா்ப்பிணிக்கு பிரசவம் பாா்க்கப்பட்டு, ஆண் குழந்தை பிறந்தது.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வியாழக்கிழமை ஓடும் பேருந்தில் நிறைமாத கா்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவம் பாா்க்கப்பட்டு, ஆண் குழந்தை பிறந்தது.
திட்டக்குடியில் இருந்து சென்னை நோக்கி பயணிகளுடன் அரசுப் பேருந்து வியாழக்கிழமை புறப்பட்டது. ஓட்டுநா் ராஜமாணிக்கம் பேருந்தை ஓட்டினாா். கொரக்கவாடியில் நிறைமாத கா்ப்பிணி பெண்ணும், மூதாட்டியும் ஏறினா்.
சிறிது நேரத்தில் கா்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, பேருந்து கொத்தனூா் கிராமத்தில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் கீழே இறங்கிய நிலையில், கா்ப்பிணிப் பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னா், 108 அவசர ஊா்தி மூலம் தாய் மற்றும் குழந்தையை மங்களூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா்.

