டங்ஸ்டன் கனிம சுரங்க திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்: தி.வேல்முருகன்
டங்ஸ்டன் கனிம சுரங்க திட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.


தமிழ்நாட்டு மக்களின் தொன்மை, வரலாறு, சுற்றுச்சூழல், பல்லுயிரிய வளத்தை சீரழிக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் எம்எல்ஏ வலியுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வேதாந்தா குழுமம் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க ஏலம் எடுத்துள்ளது. இந்தப் பகுதி தமிழகத்தின் முதல் பல்லுயிா் பாரம்பரிய தலமாகும். மேலும், பழந்தமிழா் வாழ்வியலை விளக்கும் தொன்மைப் படிமங்கள் நிறைந்த பகுதியாகும். அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாகவும் திகழ்கிறது.
இங்கு கனிமச் சுரங்கம் அமைக்கப்பட்டால் மேற்கண்ட அனைத்தும் சிதிலமடையும். உயிரினங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்.
எனவே, இந்தத் திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். இந்தத் திட்டத்துக்கான எந்தவித அனுமதியையும் தமிழக அரசு வழங்கக் கூடாது என்றாா் தி.வேல்முருகன்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...