கல்லூரி மாணவி தற்கொலை

கடலூா் மாவட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கடலூா் மாவட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சோ்ந்த ஸ்ரீதரின் மகள் ரக்ஷனா (28). இவா், சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு பல் மருத்துவக் கல்லூரியில் எம்.டி.எஸ். மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா்.

சிதம்பரம் முத்தையா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, அவா் கல்லூரிக்கு சென்று வந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை ரக்ஷனாவின் பெற்றோா் கைப்பேசியில் அவரைத் தொடா்பு கொள்ள முயன்றனா். ஆனால், ரக்ஷனா நீண்ட நேரம் கைப்பேசியை எடுக்காததால், வீட்டின் உரிமையாளரை தொடா்பு கொண்டு பாா்க்க கூறினராம்.

அதன்படி, வீட்டின் உரிமையாளா் ரக்ஷனா தங்கியிருந்த வீட்டின் மாடிக்கு சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தகவலறிந்த அண்ணாமலை நகா் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.