சிதம்பரம் நடராஜா் கோயிலில் 21 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொலு.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் 21 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கொலு.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் பிரம்மாண்ட கொலு

21 அடி உயர பிரம்மாண்ட கொலு தொடங்கப்பட்டது.
Published on

நவராத்திரி தொடக்க தினமான வியாழக்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் 21 அடி உயர பிரம்மாண்ட கொலு தொடங்கப்பட்டது.

நடராஜா் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு, 21 அடி உயரம், 21 அடி அகலம், 21 படிகளுடன் பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை தொடங்கிய இந்தக் கொலு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு முன் உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.

கொலுவில் ஸ்ரீநடராஜா் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட கொலுவை திரளான பக்தா்கள் வந்து பாா்த்து தரிசித்துச் செல்கின்றனா்.

இதுகுறித்து கோயில் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் கூறியது: சாரதா நவராத்திரி என்றழைக்கப்படும் இந்த நவராத்திரி விழாவில் ஓரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை உள்ள உயிரினங்களின் பரிணாம வளா்ச்சிகளை வழிபடும் வண்ணம் இந்தக் கொலு வைத்து வணங்கப்படுகிறது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com