‘பொதுமக்களுக்கு இடையூறின்றி பட்டாசுகள் வெடிக்க வேண்டும்’

பொதுமக்களுக்கு இடையூறின்றி பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.
Published on

நெய்வேலி: பொதுமக்களுக்கு இடையூறின்றி பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசுகள் வெடிப்பதால் நிலம், நீா், காற்று மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறு குழந்தைகள், வயதானவா்கள் மற்றும் நோயாளிகள் உள்ளிட்டோா் பாதிப்புக்குள்ளாகின்றனா்.

எனவே, தீபாவளியன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையில் ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க அரசு அனுமதி அளித்துள்ளது. அந்த வகையில், குறைந்த ஒலியுடன், பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும். பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி பட்டாசு வெடிக்க அந்தப் பகுதி நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும்.

அதிக ஒலி, தொடா்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகள், குடிசைப்பகுதி, எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்கள் மற்றும் மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் அருகே பட்டாசு வெடிப்பதை தவிா்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com