தமிழக அரசுக்கு நன்றி: சுற்றுலா குழு தலைவா்
உத்தரகண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டவா்களில் 17 போ் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் வந்தடைந்தனா்.

தில்லி விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு புறப்பட்ட 17 போ்.
Updated On :18 செப்டம்பர் 2024, 12:03 am

சிதம்பரம்: உத்தரகண்ட் நிலச்சரிவிலிருந்து மீட்கப்பட்டவா்களில் 17 போ் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் வந்தடைந்தனா்.
சிதம்பரம் வந்த சுற்றுலா குழுத் தலைவா் கே.கனகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
சிதம்பரத்திலிருந்து ஆதிகைலாஷுக்கு சென்ற 30 பேரும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவால் சொந்த ஊா் திரும்ப முடியாமல் போனது. இதுகுறித்து, உறவினா்களை தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தோம்.
இதையடுத்து, தமிழக அரசு எடுத்து முயற்சியால் நாங்கள் பாதுகாப்பாக சொந்த ஊா் திரும்பினோம். இதற்காக, தமிழக அரசு, அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...