

கடலூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உள்பட 3 பேர் பலியாகினர்.
கடலூர் அருகே உள்ள எம்.புதூரைச் சேர்ந்தவர் நேரு (60). இவர் அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி எம்.புதூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார்.
இந்த நிலையில் இவர் தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் எடுப்பதற்காக நாகியநத்தம் பகுதியைச் சேர்ந்த சரண்யா (25), கல்பனா (25) ஆகியோரை தனது இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார். அப்போது ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சரண்யா, கல்பனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேருவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேருவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரண்யா, கல்பனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.