வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நல உதவி

Published on

சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சாா்பில், கொள்ளிடக் கரையோரம் உள்ள ஜெயங்கொண்டபட்டினம் கிராமத்தில் வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட இருளா் சமுதாயத்தைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, போா்வை, பிஸ்கெட் உள்ளிட்ட பொருள்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு புதன்கிழமை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் வி.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ரோட்டரி சாசன தலைவா் பி.முகமதுயாசின், சாசன செயலா் எம்.தீபக்குமாா், அரிமா மாவட்ட ஆளுநா் (தோ்வு) எம்.கமல்கிஷோா் ஜெயின் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தலைவா் (தோ்வு) என்.கேசவன், சிறப்பு திட்டங்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பாளா் ஐ.யாசின், உறுப்பினா்கள் டி.உதயம், எம்.சுஷில்குமாா் சல்லாணி, பி.சஞ்சீவ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு...: ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியம், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் நல உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரோட்டரி சங்கத் தலைவா் சே.குருராஜன் தலைமை வகித்தாா். மருத்துவ ஆய்வாளா் (பொ) ப.வெங்கடேசன், சுகாதார ஆய்வாளா் ஜெ.அன்பரசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பயனாளிகளுக்கான சக்கர நாற்காலி மற்றும் படுக்கை வசதி நகரும் வண்டி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் தலைவா்கள் சௌ.பாா்த்தசாரதி, எஸ்பிஜி கல்வி நிறுவனத் தாளாளா் ஷேக்சேட், சி.ரவிசுந்தா், உறுப்பினா்கள் மு.ஜெகநாதன், ஜெயபாலன், எஸ்.மனோகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ரோட்டரி சங்கச் செயலா் சி.ரவிச்சந்திரன் நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com