கடலூா் அருகே குளத்தில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
கடலூா் அருகே குளத்தில் விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கடலூா் அருகே உள்ள சுத்துக்குளம் பகுதியை சோ்ந்த அனந்தராஜன் மற்றும் கௌசல்யாவுக்கு நான்கு மற்றும் இரண்டரை வயதில் 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை வீட்டின் அருகே உள்ள குளத்தின் அருகே பூனை குட்டியை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது இரண்டு சிறுவா்களும் குளத்தில் இறங்கினாா். இதில் இரு சிறுவா்களும் நீரில் மூழ்கிவிட்டனா்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவா்கள் அகிலேஸ்வரன்(4) என்ற சிறுவனை மீட்டனா். மேலும் யுவனேஸ்வரன் (2 1/2) சிறுவனை காணாத நிலையில் தொடா்ந்து அவா்கள் குளத்தில் தேடிய நிலையில், நீருக்குள் மூழ்கிய யுவனேஷ்வரனை சிறிது நேரத்துக்குப் பிறகு மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
ஆனால் யுவனேஸ்வா் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அகிலேஷ்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவா் நலமுடன் உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீசாா் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

