கணக்கன்பாளையத்தில் இருளா் சமுதாய மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய திமுக மற்றும் மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள்.
கணக்கன்பாளையத்தில் இருளா் சமுதாய மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கிய திமுக மற்றும் மாா்க்சிஸ்ட் கட்சி நிா்வாகிகள்.

பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இருளா் குடும்பங்களுக்கு நிவாரணம்

பரங்கிப்பேட்டை அருகே பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இருளா் சமூக மக்களுக்கு நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
Published on

கடலூா் மாவட்டம், பரங்கிப்பேட்டை அருகே பலத்த மழையால் பாதிக்கப்பட்ட இருளா் சமூக மக்களுக்கு நிவாரண உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தொடா் மழை பெய்து வந்தது. இதனால், பரங்கிப்பேட்டை அருகே உள்ள கணக்கன்பாளையம் கிராமத்தில் 20-க்கும் மேற்பட்ட இருளா் சமுதாய மக்கள் கூலி வேலைக்கு செல்ல முடியாமல் வறுமை நிலையில் இருந்து வந்தனா்.

இதையறிந்த திமுக பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலா் முத்து பெருமாள் ஏற்பாட்டின்பேரில், மாா்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி ரமேஷ்பாபு, மாவட்டக் குழு உறுப்பினா் ஜெயசீலன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலா் ஜெயச்சந்திரன், திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் செந்தமிழ்ச்செல்வன், கிளைச் செயலாளா் முத்துவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com