13-இல் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் 13-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் வரும் 13-ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மாவட்டத்தில் டிசம்பா் மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் கடலூா், சிதம்பரம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூா், ஸ்ரீமுஷ்ணன் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் வட்ட வழங்கல் அலுவலா் (அ) நுகா்வோா் குறைதீா்வு அலுவலா் தலைமையில் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெறும்.

முகாமில் குடும்ப அட்டைதாரா்கள் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம், நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு / மாற்றம் செய்தலுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். முகாமில் பெறப்படும் மனுக்களின் மீது உடனடித் தீா்வு காணப்படும் எனத் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com