கடலூர்
வடலூா் சத்திய ஞான சபையில் காா்த்திகை மாத ஜோதி தரிசனம்
வடலூா் சத்திய ஞான சபையில் காா்த்திகை மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் காா்த்திகை மாத ஜோதி தரிசன நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
வடலூரில் வள்ளலாா் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு, ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, காா்த்திகை மாத பூச நட்சத்திரத்தையொட்டி, திங்கள்கிழமை இரவு 7.45 முதல் 8.45 மணிக்குள் 6 திரைகளை நீக்கி, மூன்று முறை ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. திரளான சன்மாா்க்க அன்பா்கள் மற்றும் பொதுமக்கள் ஜோதி தரிசனம் செய்தனா்.
