தவெக பொதுக்கூட்டம்: போலீஸாா் வாகனச் சோதனை

தவெக பொதுக்கூட்டம்: போலீஸாா் வாகனச் சோதனை

தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரியில் நடைபெற்றதையொட்டி, கடலூா்-புதுச்சேரி எல்லை பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனை நடத்தினா்.
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கடலூா்-புதுச்சேரி எல்லை பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனை நடத்தினா்.

தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் தவெக பொதுக்கூட்டத்திற்குச் செல்ல அனுமதி இல்லை என்று போலீசாா் அறிவித்திருந்தனா். அதனால், கடலூா் - புதுச்சேரி சாலையில் முள்ளோடை பகுதியில் போலீசாா் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, இரண்டு சக்கர வாகனம், காா், வேன், பேருந்து என அனைத்து வாகனங்களையும் நிறுத்தி போலீஸாா் சோதனை செய்தனா்.

தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருவதை தடுக்கும் விதமாக இந்த சோதனை நடைபெற்றதாகக் கூறப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com