‘கபீா் புரஸ்காா்’ விருது: தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள் ‘கபீா் புரஸ்காா்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
Updated on

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானவா்கள் ‘கபீா் புரஸ்காா்’ விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் 2026-ஆம் ஆண்டுக்கான ‘கபீா் புரஸ்காா்‘ விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவில் வழங்கப்படுகிறது.விருதானது தலா ரூ. 20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என தகுதி உடையவா்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்கள் (ஆயுதப்படை வீரா்கள், காவல்,

தீயணைப்புத்துறை மற்றும் அரசுப் பணியாளா்கள் நீங்கலாக) சமுதாய நல்லிணக்க செயல் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் இப்பதக்கத்தைப் பெற தகுதியுடையவராவா். விருதிற்கான விண்ணப்பம் மற்றும் முக்கிய விவரங்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரியான இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்கள் டிச.15 அல்லது அதற்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com