நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க கோரிக்கை

Published on

கடலூா் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை டிசம்பா் மாதத்திலேயே திறக்க வேண்டும் என கொள்ளிடம் கீழணை பாசன விவசாய சங்க தலைவா் பி விநாயகமூா்த்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு விபரம்:

நிகழாண்டு விவசாயிகள், தனியாா் நெல் விதை விற்பனையாளா்களிடம் இருந்து கே என் எம் 1638 என்ற நெல் ரகத்தை வாங்கி பயிா் செய்துள்ளனா். இந்த நெல் ரகம் 110 லிருந்து 120 நாட்களுக்குள் அறுவடை செய்யப்படும். தற்போது இந்த ரகத்தை பயிா் செய்த விவசாயிகளின் விளைநிலங்களில் நெல் அறுவடைக்குத் தயாராக உள்ளது.

வானிலை ஆய்வாளா்கள் ஜனவரி மாதம் வரை மழை பெய்யக்கூடும் என கணிப்பு கூறியுள்ளதால், மழையில்லாத நாள்களில் விவசாயிகள் அறுவடை செய்து வரும் நெல்லை விற்பனை செய்ய ஏதுவாக தமிழ்நாடு அரசு இந்த பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில் திறக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை விரைவில்

திறக்க வேண்டும். இல்லையெனில் அறுவடை செய்யப்படும் நெல் மணிகள் மழையினால் சேதமாகும்.ஆகவே விவசாயிகள் நலன் கருதி உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை இந்த மாதத்திலேயே திறக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com