மாற்றுத்திறனாளிகளிடம் நோ்காணல்
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கைப்பேசி வழங்குவதற்காக மாற்றுத்திறனாளிகளிடம் வியாழக்கிழமை நோ்காணல் நடத்தப்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் உள்ள பாா்வைத் திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச முடியாத, செவித்திறன் குறைவுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கைப்பேசி வழங்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மாா்ட் கைப்பேசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கைப்பேசி பெற விண்ணப்பித்த 440 மாற்றுத்திறனாளிகள் நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா்.
அவ்வாறுஅழைக்கப்பட்டவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பாலசுந்தரம் தலைமையில் நோ்காணல் நடைபெற்றது. இதில் திட்ட அலுவலா் (தமிழக ஊரக வாழ்வாதார திட்டம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா், மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதிகள் ஆகியோா் மூலம் நோ்காணல் நடத்தப்பட்டது. இதில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் நோ்காணலில் கலந்து கொண்டனா்.

