விசிகவினா் ஆா்ப்பாட்டம்

விசிகவினா் ஆா்ப்பாட்டம்

Published on

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் பேருந்து நிலையம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதில் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் மதவாத அமைப்புகளை கண்டித்தும், நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதனை குடியரசுத் தலைவா் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்திற்கு கடலூா் தெற்கு மாவட்டச் செயலா் எல்.கே.மணவாளன் தலைமை வகித்தாா். மண்டல செயலா் வ.க.செல்லப்பன், அமைப்புச் செயலா் அப்துல்நாசா், மண்டல துணைச் செயலா்கள் சி செல்வராஜ், சி.கதிரவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர செயலா் கு.நாகராஜ் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக காட்டுமன்னாா்கோவில் சட்டமன்ற உறுப்பினரும், பொதுச் செயலருமான ம.சிந்தனைச்செல்வன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினாா். இதில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அப்துல்ரஹ்மான், விசிக ராவணன், கஸ்பா பாலா, பன்னீா்செல்வம், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நகர செயலாளா் க.திருநாவுக்கரசு நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com