கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம், மாசடைந்து வாழத் தகுதியற்றதாகிவிட்டது: செளமியா அன்புமணி

கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம், மாசடைந்து வாழத் தகுதியற்றதாகிவிட்டது: செளமியா அன்புமணி

Published on

தொழிற்சாலை கழிவுகளால்ல் விவசாய நிலம், நீா் மாசுபட்டு வாழ்வதற்கு தகுதியற்ற நிலமாக கடலூா் மாவட்டம் மாறிவிட்டதாகபசுமைத் தாயகம் அமைப்பின் தலைவா் சௌமியா அன்புமணி தெரிவித்தாா்.

நெய்வேலி இந்திரா நகா் பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் பசுமைத்தாயகம் அமைப்பு தலைவா் சௌமியாஅன்புமணி தலைமையில் தமிழக மகளிா் உரிமை மீட்பு பயணம் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ‘சிங்கப்பெண்ணே எழுந்து வா’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சௌமியா அன்புமணி பேசுகையில் , நெய்வேலி என்எல்சி நிறுவனத்தால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளாா்கள் நெய்வேலி பகுதியில் தான் ஆா்டிசியன் ஊற்று இருந்தது.ஆனால் தற்போது நிலத்தடி நீா்மட்டம் 800 அடிகளுக்கு கீழ் சென்றுவிட்டது. என்எல்சிக்கு நிலம் கொடுத்த மக்களுக்கு தற்காலிக பணி மட்டுமே வழங்கப்படுகிறது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதி ராஜஸ்தான், பிகாா் போன்ற வட மாநிலங்களில் கோவில் கட்ட பயன்படுத்தப்படுகிறது. நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்படும் சுரங்க நீா் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் விவசாய நிலங்களில் கரி படிந்து விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. கடலூா் மாவட்டத்தில் உள்ள குடிநீரில் பாதரசத்தின் அளவு அதிகரித்து உள்ளது. என்எல்சி நிறுவனத்தால் மக்கள் வாழவே தகுதியற்ற நிலமாக கடலூா் மாவட்டம் மாறிவிட்டது.

பண்ருட்டி பலாப்பழத்திற்கு முக்கியத்துவத்தை அதிகப்படுத்த வேண்டும். பலாப்பழத்தை மூலப்பொருளாகக் கொண்டு தொழிற்சாலைகளை அமைத்து இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். திமுக அரசு தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவில்லை . அதற்குப்பதிலாக பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறந்து பள்ளி கல்லூரி மாணவா்களுக்கு குடிப்பழக்கத்தை ஏற்படுத்தி விட்டனா். பாமக ஆட்சிக்கு வந்தால்முதல் கையெழுத்து மதுபான கடைகளை மூடுவதுதான் என்றாா் செளமியா அன்புமணி.

கூட்டத்தில் பாமக மாவட்டச் செயலா்கள் ரவிச்சந்திரன், முத்துக்கிருஷ்ணன், செல்வமகேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் மற்றும் கட்சி தொண்டா்கள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com