தோ்தலில் அதிக வாக்குகளை பெற கடுமையாக உழைக்க வேண்டும்: திமுகவினருக்கு அமைச்சா் எம்ஆா்கே. பன்னீா்செல்வம் அறிவுரை
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அதிக வாக்குகளை பெற கட்சியினா் தீவிரமாக உழைக்க வேண்டும் என்று அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா் செல்வம் அறிவுறுத்தினாா்.
சிதம்பரம் தெற்குவாணியதெருவில் உள்ள தனியாா் மண்டபத்தில் திமுக சாா்பில் என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி குறித்த ஆய்வுக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்ட கிழக்கு திமுக மற்றும் நகரம் சாா்பில் சிதம்பரத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டு கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடினாா்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி அலுவலா்களும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், தினமும் மக்களை சந்தித்து அதிக வாக்குகளை பெற கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்தாா். ஆய்வு கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளா் பாரிபூபாலன். மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் த.ஜேம்ஸ்விஜயராகவன், மாவட்ட பொறியாளா் அணி அமைப்பாளா் அப்பு.சந்திரசேகரன், நகரத் துணைச் செயலாளா்கள் ஆா்.இளங்கோவன், பா.பாலசுப்பிரமணியன், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

