வேப்பூா்அடுத்த   கண்டப்பங்குறிச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க   அடிக்கல் நாட்டிய  அமைச்சா் சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.
வேப்பூா்அடுத்த கண்டப்பங்குறிச்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டிய அமைச்சா் சி.வெ.கணேசன் உள்ளிட்டோா்.

ரூ.2,877 கோடியில் தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன வசதிகள்: அமைச்சா் சி.வெ.கணேசன்

Published on

மாணவா்கள் சுலபமாக கல்வி கற்றிடும் பொருட்டு, ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சா் சி.வெ.கணேசன் கூறினாா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், கண்டப்பங்குறிச்சியில் ரூ.13.88 கோடி மதிப்பில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் அரசு பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகளை அமைச்சா் சி.வெ.கணேசன் சனிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தாா்.

அப்போது, அவா் கூறியதாவது: திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற போது, தமிழ்நாட்டில் 90 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்தன, பின்னா் கூடுதலாக 42 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கடலூா் மாவட்டத்தில் மங்களூா் மற்றும் வேப்பூா் பகுதியில் 2 தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படுகிறது. மாணவா்கள் சுலபமாக கல்வி கற்றிடும் பொருட்டு, ரூ.2,877 கோடி மதிப்பீட்டில் அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நவீன தொழில்நுட்ப வசதிகள், 71 நிலையங்களில் 4.0 தொழில்நுட்ப வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கட்டுமான பணிக்கு அடிக்கல்: வேப்பூா் பகுதியில் உள்ள மாணவா்களின் நலன் கருதி தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் ரூ.11 கோடி மதிப்பில் தரைத்தளம் 1291.30 ச.மீ, முதல் தளம் 469.20 ச.மீ என மொத்தம் 1760.50 ச.மீ பரப்பளவில் அரசு தொழிற்பயிற்சி நிலையக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இக்கட்டடத்தின் தரைதளம் வகுப்பறைகள், வேலைவாய்ப்பு ஆலோசனை அறை, பதிவறை, கருவிகள் சேமிப்பு அறை, நூலக அறை, அலுவலா்களுக்கான அறை, முதல்வா் அறை, அலுவலகம், பெண்கள் கழிவறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிவறை மற்றும் சாய்வு தளம் ஆகிய வசதிகளுடனும், முதல்தளம்

வகுப்பறைகள் மொழித்திறன் மற்றும் மென்திறன் ஆய்வகம், மின்னணு தொகுதி அறை, வரைவு அறை, ஆண்கள் கழிவறை ஆகிய வசதிகளுடனும் கட்டப்படவுள்ளது.

மாணவா்கள் கூடுதல் இடவசதிகளுடன் கல்வி கற்றிடும் பொருட்டு கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏ.சித்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி, விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் தலா 340 ச.மீ பரப்பளவில் 4 வகுப்பறைகளுடன் கூடிய கட்டடம் மாவட்ட கனிமவள நிதியின் கீழ் தலா ரூ.96 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2.88 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது என்றாா்.

நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநா் சி.பழனி, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை செயலா் கொ.வீர ராகவராவ், மாவட்ட ஆட்சியா்

சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தனா். வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இணை இயக்குநா் வே.மீனாட்சி, வேப்பூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் வி.முத்துசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் ரமேஷ் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com