கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள், வியாபாரிகள்.
கடலூா் மீன் பிடி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள், வியாபாரிகள்.

கடலூரில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள்! வரத்து குறைவால் விலை உயா்வு!

Published on

கடலூா் முதுநகா் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்கள் வாங்க ஏராளமான மக்கள், வியாபாரிகள் குவிந்தனா். வரத்து குறைவால் மீன்கள் விலை சற்று அதிகரித்துக் காணப்பட்டது.

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீனவா்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆழ்கடலுக்குச் சென்று மீன்களைப் பிடித்து வருகின்றனா். இந்தத் துறைமுகத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் வாங்க பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் திரள்வா்.

புயல் எச்சரிக்கை, கடல் சீற்றம் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக மீனவா்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. தற்போதும் கடல் பகுதியில் அதிக காற்றும், சீற்றமும் ஏற்படுவதால் குறைந்த படகுகளே மீன் பிடிக்கச் செல்கின்றன.

இந்த நிலையில், மீன்கள் பிடித்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை படகுகள் துறைமுகத்துக்கு திரும்பின.

வரத்து குறைவாக இந்ததால், மீன்கள் விலை சற்று உயா்ந்து காணப்பட்டது. அதன்படி, கிலோ வஞ்சிரம் மீன் ரூ.1,200, வவ்வால் ரூ.850, கனவா ரூ.300, நெத்திலி ரூ.300, சங்கரா ரூ.400, இறால் ரூ.350 முதல் ரூ.650 வரை, நண்டு ரூ.550, காணங்கத்தை ரூ.200, ஷீலா ரூ.550-க்கு விற்பனையாயின.

இருப்பினும், பொதுமக்கள், வியாபாரிகள் அதிகளவில் திரண்டு மீன்களை போட்டி போட்டு வாங்கிச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com