சிதம்பரம் குருஞானசம்பந்தா் பள்ளியில் மாணவா்களுக்கு சான்றிழ்கள் வழங்கிய ஆசி வழங்கிய பள்ளியின் புரவலரான ஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.
கடலூர்
குருஞானசம்பந்தா் பள்ளிக்கு தருமை ஆதீனம் வருகை
சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு, தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை வருகை தந்தாா்.
சிதம்பரம்: சிதம்பரம் கனகசபைநகரில் உள்ள தருமை ஆதீனத்தின் குருஞானசம்பந்தா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு, தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை வருகை தந்தாா்.
இந்தப் பள்ளியின் புரவலரான அவா், பள்ளியை பாா்வையிட்டு, அதன் வளா்ச்சிக்கு நல்லாசி வழங்கினாா். மேலும், அண்மையில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள், கேடயம் வழங்கி ஆசீா்வாதம் வழங்கினாா்.
அப்போது, தருமை ஆதீன வெள்ளியம்பலவாணத் தம்பிரான் சுவாமிகள் உடனிருந்தாா். நிகழ்ச்சியில் பள்ளிச் செயலா் பி.ரெங்கராஜன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் எஸ்.செந்தில்வேலன், வி.அருண், பி.கமல்சந்த், பள்ளி முதல்வா் ஜி.ஜெயக்குமாா், துணை முதல்வா் டி.இராஜேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

