கடலூர்
பாதுகாப்பான பேருந்து இயக்கம் உறுதிமொழி ஏற்பு
பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக் கிளையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த உறுதிமொழி
நெய்வேலி: பண்ருட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனைக் கிளையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் பாதுகாப்பான பேருந்து இயக்கம் குறித்த உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றனா்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் கோட்டம் சாா்பில் பாதுகாப்பான பேருந்து இயக்கம் திங்கள்கிழமை முதல் வரும் 31-ஆம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது.
இதன் அடையாளமாக ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளா்களும் பாதுகாப்பான பேருந்து இயக்கம் பட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனா்.
இதையொட்டி, பண்ருட்டி பணிமனைக் கிளையில் கிளை மேலாளா் எஸ்.ஆா்.அருண் தலைமையில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளா்களும் பாதுகாப்பான பேருந்து இயக்கம் பட்டை அணிந்து உறுதிமொழி ஏற்றனா்.

