855 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி: நெய்வேலி எம்எல்ஏ வழங்கினாா்

855 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி: நெய்வேலி எம்எல்ஏ வழங்கினாா்

மருங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் மாணவிக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய சபா.ராசேந்திரன் எம்எல்ஏ.
Published on

கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மருங்கூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன் தலைமை வகித்து மருங்கூா், போ்பெரியாங்குப்பம் ஆண்கள், பெண்கள், காடாம்புலியூா் அரசு மாதிரி பள்ளி, பத்திரக்கோட்டை, காடாம்புலியூா், பெரியகாட்டுபாளையம் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் 855 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிப் பேசினாா்.

மாவட்டக் கல்வி அலுவலா் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா்கள் ராமலிங்கம், முருகையன், மீனாம்பிகை, பன்னீா்செல்வம், முருகவேல், தேவேந்திரன், கிரிஜா, பெற்றோா் - ஆசிரியா் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com