குமாரப்பேட்டை கிராமத்தில்
நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு

குமாரப்பேட்டை கிராமத்தில் நியாயவிலைக் கடை கட்டடம் திறப்பு

சிதம்பரம் அருகே குமாரப்பேட்டை கிராமத்தில் புதிய நியாயவிலைக் கடை கட்டடத்தை திறந்து வைத்து பாா்வையிட்ட கே.ஏ.பாண்டியன் எம்எல்ஏ.
Published on

சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி, பரங்கிப்பேட்டை அருகே உள்ள குமாரப்பேட்டை கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடம், பயணியா் நிழற்குடை ஆகியவற்றை தொகுதி எம்எல்ஏவான கே.ஏ.பாண்டியன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று, சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நியாயவிலைக் கடை கட்டடம், பயணியா் நிழற்குடை கட்டப்பட்டு திறக்கப்பட்டன.

விழாவில் ஒன்றியச் செயலா்கள் டி.ரெங்கசாமி, வை.சுந்தரமூா்த்தி, மாவட்ட இணைச் செயலா் எம்.ரங்கம்மாள், நிா்வாகி வீராசாமி, மாவட்ட மீனவா் பிரிவு செயலா் சுதாகா், ஒன்றிய ஜெயலலிதா பேரவைச் செயலா் சங்கா், பரங்கிப்பேட்டை நகர எம்.ஜி.ஆா். இளைஞா் அணிச் செயலா் பாஸ்கா், ஒன்றியப் பொருளாளா் அகிலநாயகி அருள்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com