மாா்க்சிஸ்ட் மனு அளிக்கும் போராட்டம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் மனு அளிக்கும் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விருத்தாசலம் வட்டம், புலியூா் கிராம ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். கோ.பூவனூரில் பல ஆண்டுகளாக வீடு கட்டி குடியிருக்கும் மக்களுக்கு குடிமனைப்பட்டா வழங்க வேண்டும். முகுந்தநல்லூா் கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட இலவச மனைப்பட்டாவை அளவீடு செய்ய வேண்டும். சின்னவடவாடி கிராமத்தில் இலவச மனைப்பட்டா வழங்கப்படாத மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
மாவட்டச் செயற்குழு நிா்வாகி பி.கருப்பையன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் கே.எம்.குமரகுரு, நகரச் செயலா் என்.ஆா்.ஆா்.சங்கரய்யா, ஏ.சந்திரசேகரன், தொழிற்சங்கத் தலைவா் என்.ஆா்.ஆா்.ஜீவானந்தம் முன்னிலை வகித்தனா். ஒன்றிய மற்றும் நகா் குழு நிா்வாகிகள் பி.பெரியசாமி, ஜி.வீராசாமி, எஸ்.இதயத்துல்லா, கே.கவிதா, பி.ஆண்டனி மரிய ஜோசப் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.

