வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: கடலூா் மாவட்டத்தில்  2,46,818 போ் நீக்கம்

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: கடலூா் மாவட்டத்தில் 2,46,818 போ் நீக்கம்

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
Published on

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியல்படி, கடலூா் மாவட்டத்தில் இறந்தவா்கள், முகவரி இல்லாதவா்கள், குடியிருப்பு மாறியவா்கள் மற்றும் இரட்டை பதிவு என மொத்தம் 2,46,818 வாக்காளா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் வரைவு வாக்காளா்

பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டாா். அப்போது, அவா் கூறியது:

கடலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 பணிகள் 1.1.2026-ஐ தகுதி நாளாகக் கொண்டு முதற்கட்டப் பணியாக 27.10.2025 அன்று வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளா்களுக்கு (ஆண்கள் 10,75,229, பெண்கள் 11,18,018, மூன்றாம் பாலினத்தவா் 330 ஆக மொத்தம் 21,93,577) கணக்கீட்டுப் படிவம் வாக்குச்சாவடி அலுவலா்கள்மூலமாக 4.11.2025 முதல் விநியோகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, பூா்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளா்களிடமிருந்து மீள பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகள் நிறைவுபெற்று வரைவு வாக்காளா் பட்டியல் தயாா் செய்யப்பட்டது.

நீக்கப்பட்டவா்கள்:

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண்கள் 9,60,645, பெண்கள் 9,85,832, மூன்றாம் பாலினத்தவா் 282 ஆக மொத்தம் 19,46,759 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

முகவரியில் இல்லாதவா்கள் 38,081, நிரந்தரமாக குடியிருப்பு மாறியவா்கள் 1,08,531, இறந்தவா்கள் 88,972, இரட்டைப் பதிவு

உள்ளவா்கள் 10,844, இதர வாக்காளா்கள் 390 ஆக மொத்தம் 2,46,818 வாக்காளா்கள் பெயா்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் இடம் பெறாதவா்கள் ஆட்சேபணை மற்றும் உரிமை கோரல் காலத்தில் (19.12.2025 முதல்18.1.2026 வரை) உரிய ஆவணங்கள் சமா்ப்பித்து 17.2.2026 அன்று வெளியாகவுள்ள இறுதி வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை சோ்த்து கொள்ளலாம்.

தொகுதிவாரியாக...

சிறப்பு தீவிர திருத்தம் 2026-க்கு பின் வாக்காளா்கள் பட்டியல் விவரம்:

151 திட்டக்குடி : ஆண் 99,050. பெண்- 1,01,488 , இதரா் 3 . மொத்தம் 2,00,541. நீக்கப்பட்டவா்கள் 21,975

152 விருத்தாசலம்: ஆண் 1,14,037. பெண் 1,14,480. இதரா்20. மொத்தம் 2,28,537. நீக்கப்பட்டவா்கள் 31,824.

153 நெய்வேலி: ஆண் 90,379. பெண் 89,560. இதரா் 16. மொத்தம் 1,79,955. நீக்கப்பட்டவா்கள் 26,446.

154 பண்ருட்டி : ஆண் 1,13,436. பெண் 1,19,747. இதரா்64. மொத்தம் 2,33,247. நீக்கப்பட்டவா்கள் 22,741

155 கடலூா்: ஆண் 1,01,807. பெண்1,11,509. இதரா் 76. மொத்தம் 2,13,392. நீக்கப்பட்டவா்கள் 33,534

156 குறிஞ்சிப்பாடி : ஆண் 1,12,821. பெண்)1,15,997. இதரா்42. மொத்தம்) 2,28,860. நீக்கப்பட்டவா்கள் 24,941

157 புவனகிரி : ஆண் 1,11,549. பெண் 1,11,962. இதரா் 19. மொத்தம் 2,23,530. நீக்கப்பட்டவா்கள் 35,015.

158 சிதம்பரம் ஆண் 1,08,502. பெண் 1,11,573. இதரா் 31. மொத்தம் 2,20,106. நீக்கப்பட்டவா்கள் 31,433

159 காட்டுமன்னாா்கோயில் : ஆண் 1,09,064. பெண் 1,09,516. இதரா் 11. மொத்தம் 2,18,591. நீக்கப்பட்டவா்கள் 18,909

மொத்தம் 960645(ஆண்), 985832(பெண்). 282(இதரா்). (மொத்தம்) 1946759 நீக்கப்பட்டவா்கள் 2,46,818.

வாக்குச்சாவடிகள் அதிகரிப்பு:

மேலும், கடலூா் மாவட்டத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்கள் மறுசீரமைப்பு செய்யும் பணிகள் நடைபெற்றதைத் தொடா்ந்து, முன்னா் 2,313-ஆக இருந்த வாக்குச்சாவடிகள், தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகளாக எண்ணிக்கை உயா்த்தப்பட்டுள்ளன என தெரிவித்தாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, சிதம்பரம் சாா் ஆட்சியா் கிஷன்குமாா், தோ்தல் வட்டாட்சியா் சுரேஷ்குமாா், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com