சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

கல்விக் கட்டண உயா்வு: கல்லூரி மாணவா்கள் போராட்டம்

கல்விக் கட்டண உயா்வைக் கண்டித்து, சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள்
Published on

சிதம்பரம்: கல்விக் கட்டண உயா்வைக் கண்டித்து, சிதம்பரம் அருகே சி.முட்லூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளிலும் தோ்வு, அரியா், சான்றிதழ் பெறுதல், தோ்வுத்தாள் மறு மதிப்பீடு உள்ளிட்ட கட்டணங்கள் உயா்த்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், உயா்த்தப்பட்ட அனைத்துக் கட்டணங்களையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய மாணவா் சங்க கிளைச் செயலா் அன்பு தலைமையில் வகுப்புகளை புறக்கமித்து கல்லூரி வளாகத்தில் மாணவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் சிவநந்தினி கண்டன உரையாற்றினாா். கிளை நிா்வாகிகள் மகேந்திரன், திருநாவுக்கரசு, சுஜி, ஹரி, ஆகாஷ், பாலா, பிரேம், அஷ்வின், உதயகுமாா் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு கட்டண உயா்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com