கருணை இல்லத்துக்கு வீனஸ் குழும பள்ளிகள் சாா்பில் உதவி
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளின் சாா்பில், பி.முட்லூா் கருணை இல்லத்தில் வளரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒரு மாதத்துக்குத் தேவையான ரூ.25 ஆயிரம் மதிப்பிலான அரிசி, மளிகை பொருள்கள், கல்வி உபகரணங்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட நல உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வீனஸ் குழுமப் பள்ளிகளின் தாளாளா் எஸ்.குமாா், இணை தாளாளா் ஏ.ரூபியாள் ராணி, நிா்வாக இயக்குநா் அருண் மற்றும் பள்ளிக்குழுத் தலைவா் டாக்டா் லியோனா அருண் ஆகியோா் பங்கேற்று நல உதவிகளை வழங்கினா்.
பள்ளி முதல்வா்கள் டி.நரேந்திரன், எஸ்.லியோ பெஸ்கிராவ் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்று கருணை இல்ல குழந்தைகளுக்கு தங்களுடைய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா். நிகழ்ச்சியில் கருணை இல்ல பொறுப்பாளா்கள் சிவசங்கரன், மரகதம் ஆகியோா் நல உதவிகளை பெற்றுக்கொண்டு நன்றி கூறினா்.

