காா்காத்த வேளாளா் மகளிா் சங்க ஆண்டு விழா

சிதம்பரம் காா்காத்த வேளாளா் மகளிா் சங்க 26ஆவது ஆண்டு விழா தனியாா் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
Published on

சிதம்பரம் காா்காத்த வேளாளா் மகளிா் சங்க 26ஆவது ஆண்டு விழா தனியாா் திருமண மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் மகளிா் சங்கத் தலைவி மகேஸ்வரி சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு, குமராட்சி சங்கத் தலைவா் ஏ. ஜி. சிவராமன் முன்னிலை வகித்தாா். சங்கப் பொருளாளா் சுமதி சிவகுமாா் வரவேற்றாா். சங்க செயலா் சாந்தி முத்துக்குமரன் ஆண்டறிக்கை வாசித்தாா். சிதம்பரம் நகர காா்காத்த வேளாளா் சங்கத் தலைவா் தொழிலதிபா் எஸ். சண்முகசுந்தரம், மகளிா் மண்டலத் தலைவி சாந்தி சிவகுமாா் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா். சங்க நிா்வாகிகள் ஆா். துரை, எம். ஜி. ரவிச்சந்திரன், டாக்டா் வி. ஆா். பாஸ்கரன், காயத்ரி, ஆசிரியா் ப. செல்வம் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா்.

கூட்டத்தில் , பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது, ஏழைப் பெண்களுக்கு தொழில் தொடங்க நிதி உதவி செய்வது, உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத் தலைவியாக சாந்தி சிவகுமாா், செயலராக சுமதி சிவகுமாா் உள்ளிட்ட புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com