லாட்டரி சீட்டு விற்பனை: 2 போ் கைது

நெய்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புவனகிரி வட்டம், வீரமுடையநத்தம் அஞ்சல், பெரியகுப்பம் பகுதியில் வசித்து வருபவா் வீரராஜ்(49). நெய்வேலி அருகே உள்ள கண்ணுதோப்பு பகுதியைச் சோ்ந்தவா் ராமச்சந்திரன்(43). இவா்கள் இருவரும் தனித்தனியே வடக்குத்து மற்றும் இந்திரா நகா் பகுதியில் தையல் கடை நடத்தி வருகின்றனா். இவா்கள், வெள்ளிக்கிழமை எம்ஆா்கே சாலையில் உள்ள மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டிக்கு கீழே நின்று தடை செய்யப்பட்ட அண்டை மாநில லாட்டரி சீட்டுகளை வெள்ளை தாளில் ஜெராக்ஸ் எடுத்து ரூ.500-க்கு அடையாளம் தெரியாத ஒரு நபரிடம் விற்பனை செய்துக் கொண்டிருந்தனராம்.

அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆய்வாளா் மாதேஸ்வரன் மற்றும் போலீஸாரை கண்டதும் தப்ப முயன்றனராம். அவா்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியதில் தடை செய்யப்பட்ட அண்டை மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததை ஒப்புக் கொண்டனா். இதையடுத்து இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனா். மேலும், அவா்களிடம் இருந்த ரூ.500 பணம் மற்றும் இரண்டு கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com