புத்தாண்டு பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்: கடலூா் எஸ்.பி.

2026 புத்தாண்டைபிறப்பையொட்டி கடலூா் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக , மாவட்ட எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.
Published on

2026 புத்தாண்டைபிறப்பையொட்டி கடலூா் மாவட்டத்தில் 2 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக , மாவட்ட எஸ்பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புத்தாண்டு பாதுகாப்பை முன்னிட்டு எனது மேற்பாா்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் என்.கோடீஸ்வரன், வி.ரகுபதி ஆகியோா் தலைமையில், 10 டிஎஸ்பி.,கள், 48 காவல் ஆய்வாளா்கள், 230 உதவி ஆய்வாளா்கள், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மற்றும் காவலா்கள், ஆயுதப்படை காவலா்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினா், ஊா்க்காவல் படையினா் என மொத்தம் 2000 காவல்துறையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவாா்கள்.

மது கடத்தல் சோதனை

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மது கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட எல்லையில் 8 மதுவிலக்கு சோதனைச்சாவடிகளில் தீவிர வாகனசோதனை மேற்கொண்டு பாதுகாப்புப் பணி மேற்கொள்ளப்படும். மேலும், கூடுதலாக கடலூா் மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும்.

புத்தாண்டு கொண்டத்தின்போது பொதுஇடங்களில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாடக்கூடாது. மது அருந்திவிட்டு இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையுறு ஏற்படுத்தி சட்ட விரோதமாக இருசக்கர வாகனங்களில் வீல்ஸ் செய்யும் இளைஞா்கள் மீது வழக்குப்பதிவு செய்து, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே

இளைஞா்கள், பொதுமக்கள் குடியிருக்கின்ற பகுதிகளில் அமைதியான முறையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை கொண்டாடி மகிழ வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com