ஆங்கிலப் புத்தாண்டு! வெடிகுண்டு புலனாய்வு குழுவினா் சோதனை: வெள்ளிக் கடற்கரைக்குச் செல்லத் தடை
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூா் மாவட்டத்தின் பல்வேறு நகரங்களில் உள்ள முக்கிய இடங்களில் வெடிகுண்டு புலனாய்வுக் குழுவினா் புதன்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
புத்தாண்டையொட்டி, கடலூா் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அசம்பாவிதம் சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் நாச வேலைகள் தடுப்புக் குழுவினா் திடீா் சோதனை நடத்தினா்.
கடலூரில் உதவி ஆய்வாளா் ஏ.பாபு தலைமையிலான 6 போ் கொண்ட குழுவினா், மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு உபகணங்களுடன் திருப்பாதிரிப்புலியூா் பேருந்து நிலையம், ரயில் நிலையம், பாடலீஸ்வரா் கோயில் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனை நடத்தினா். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் உபகரணத்துடன் சோதனை நடைபெற்ால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
இதேபோல, பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம் பகுதிகளிலும் சோதனை நடைபெற்ாக காவல் துறையினா் தெரிவித்தனா். கடற்கரையில் தடை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூா் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு நிகழாண்டும் போலீஸாா் தடை விதித்திருந்தனா்.
அதன்படி, புதன்கிழமை இரவு 8 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை பொதுமக்கள் யாரும் வெள்ளிக் கடற்கரைக்கு வர வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தனா். அதையும் மீறி கடற்கரையில் புதன்கிழமை மாலை குவிந்த பொதுமக்களை போலீஸாா் வெளியேற்றினா்.
மேலும், கடற்கரைச் சாலையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டதோடு, கடற்கரைக்கு இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் வந்தவா்களிடம் விசாரணை நடத்தி திருப்பி அனுப்பி வைத்தனா்.

