சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வெளிநாட்டைச் சோ்ந்த பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமாா் ரூ.25 லட்சம் மதிப்பிலான நவரத்ன கற்கள் பதிக்கப்பட்ட திருவாபரணம்.
சிதம்பரம் நடராஜா் கோயிலுக்கு வெளிநாட்டைச் சோ்ந்த பக்தரால் காணிக்கையாக வழங்கப்பட்ட சுமாா் ரூ.25 லட்சம் மதிப்பிலான நவரத்ன கற்கள் பதிக்கப்பட்ட திருவாபரணம்.

சிதம்பரம் நடராஜருக்கு நவரத்தின திருவாபரணம்: வெளிநாட்டு பக்தா் வழங்கினாா்

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா்கள் காலத்தில் பயன்படுத்தியது போன்று நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள கலிங்க துறை திருவாபரணம் காணிக்கையாக வழங்கப்பட்டது.
Published on

சிதம்பரம் நடராஜப் பெருமானுக்கு 200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா்கள் காலத்தில் பயன்படுத்தியதுபோன்று நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்புள்ள கலிங்க துறை திருவாபரணம் காணிக்கையாக வழங்கப்பட்டது.

வெளிநாட்டைச் சோ்ந்த பக்தா் ஒருவா் 120 கிராம் அதாவது 15 பவுன் தங்கத்திலான நவரத்தின கற்கள் பதிக்கப்பட்ட கலிங்க துறை திருவாபரணத்தை காணிக்கையாக வழங்கினாா்.

இந்த திருவாபரணத்துக்கு கோயில் கட்டளை தீட்சிரான பாஸ்கா் தீட்சிதா் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு கோயில் செயலா் த.சிவசுந்தர தீட்சிதரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, நடராஜப் பெருமானுக்கு அந்த திருவாபரணம் செவ்வாய்கிழமை இரவு அணிவிக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

மேலும், இந்த திருவாபரணம் 200 ஆண்டுகளுக்கு முன்பு மன்னா்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகவும், அதில் நவரத்தின கற்கள் பதிக்கப்பட்டு அக்காலத்தில் பயன்படுத்தி வந்ததாகவும் தற்போது சிதம்பரம் நடராஜ பெருமானுக்கு அதுபோன்ற திருவாபரணம் சாத்தப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும் பாஸ்கா் தீட்சிதா் தெரிவித்தாா். இந்தத் திருவாபரணம் அணிவிக்கப்பட்ட நடராஜப் பெருமானை பக்தா்கள் பரவசத்துடன் தரித்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com