நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

Updated On :3 ஜனவரி 2025, 9:52 pm

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் உள்ள ஜான்டூயி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது (படம்).

ஜான்டூயி மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் செஸ், யோகா, ஸ்கேட்டிங், கராத்தே உள்ளிட்ட தனித்திறனுக்கான பயிற்சி முகாம் டிச.26 தொடங்கி 28 வரையில் நடைபெற்றது.

இதில், ஜான்டூயி பள்ளி மற்றும் பிற பள்ளிகளைச் சோ்ந்த 100 மாணவா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

பயிற்சியின் இறுதி நாளன்று, போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கும், திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவையொட்டி, கடலூரில் நடைபெற்ற திருக்கு ஒப்புவித்தல் போட்டி மற்றும் இன்டா்நேஷனல் ஓபன் டு ஆல் அபாகஸ் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் சாம்பியன் பட்டம் வென்ற மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளா் வீரதாஸ், இணைச் செயலா் நிதின் ஜோஷ்வா ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களை பாராட்டினா்.