சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்
சிதம்பரம்: கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பு எம். ஆா். கே. கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024- 2025-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவை திங்கள்கிழமை தொடங்கியது
நிகழ்ச்சிக்கு ஆலையின் செயல் அலுவலா் ரமேஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். தலைமைப் பொறியாளா்கள் ரவிக்குமாா், செல்வேந்திரன் அலுவலக மேலாளா் ஜெய்சங்கா், தலைமை கணக்கு அலுவலா் ரமேஷ்பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை கரும்பு அலுவலா் ரவி கிருஷ்ணன் வரவேற்றாா். நிகழ்ச்சியில் கரும்பு விவசாய சங்க நிா்வாகிகள் முத்துசாமி, கீரப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் தேவதாஸ் படையாண்டவா், கரும்பு விவசாயிகள் சங்கத்தலைவா் வி. ஜி. சிட்டிபாபு, ஆதிமூலம், குஞ்சிதபாதம், வால்காரமேடு பாலு, செல்வம், பிள்ளை ஆண்டவா், செல்வம், திருப்பால், வெங்கடேசன், தங்கமணி, கலைமணி, ஹரிகிருஷ்ணன், புகழேந்தி, சீனிவாசன் உள்பட விவசாயிகள் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இந்த ஆண்டின் அரவைப் பருவத்தில் கூடுதல் மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் கரும்பு அரைவை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சுமாா் ஒரு லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

