விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

சிதம்பரம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.சந்திரன் தலைமையில், கோயில் செயல் அலுவலா் ரா.மாலா, விருத்தாசலம் சரக ஆய்வாளா் அ,பிரேமா முன்னிலையில் மொத்தம் 10 உண்டியல்கள் திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் ரூ.8.60 லட்சம் ரொக்கமும், 5 கிராம் தங்கம், 8 வெள்ளி ஆகியவை இருந்தன.

X
Dinamani
www.dinamani.com