கடலூர்
போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
சிதம்பரம்: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ாக இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினா்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே வீட்டில் தங்கியிருந்தனா்.
அப்போது, அண்ணன் உறவு முறைக்கொண்ட, துப்புரவுப் பணியாளா் தெருவைச் சோ்ந்த அரவிந்த் (23) என்பவா் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து அரவிந்தை கைது செய்தனா்.
