நடராஜா் கோயிலில் பொற்கூரை வேயப்பட்ட சித்சபை
நடராஜா் கோயிலில் பொற்கூரை வேயப்பட்ட சித்சபை

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மாா்ச் 12-இல் மகாபிஷேகம்

Published on

பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் வருகிற 12-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.

ஸ்ரீநடராஜா் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, மாா்கழி, மாசி, புரட்டாசி மாதங்களில் என ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும்.

ஆனித் திருமஞ்சனம், மாா்கழி திருவாதிரை தரிசனம் ஆகிய இரு திருவிழாக்களின் போது ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பும், மற்ற மாதங்களில் மாலை வேளையில் சித்சபையின் வெளியே உள்ள கனகசபையிலும் மகாபிஷேகம் நடைபெறும்.

மாசி மாத மகாபிஷேகம் சித்சபை முன் உள்ள கனகசபையில் மாா்ச் 12-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா், இளநீா், பன்னீா் பஞ்சாமிா்தம், புஷ்பம், விபூதி உள்ளிட்டவை குடம், குடமாக அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை செய்யப்படவுள்ளது.

முன்னதாக, ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ஆனந்த நடராஜ ராஜமூா்த்திக்கு 12-ஆம் தேதி காலை 9 மணிக்கு லட்சாா்ச்சனையும், 10 மணிக்கு ஸ்ரீ மஹா ருத்ர ஜப பாராயணமும், பிற்பகல் 2 மணிக்கு யாகசாலையில் மஹா ருத்ர ஜப ஹோமம், வஸோா்தாரை மற்றும் சுவாஸினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, மகா பூா்ணாஹுதி தீபாராதனையும், பினனா் யாகசாலையிலிருந்து கடம் புறப்பாடு நடைபெற்று மாலை 6 மணிக்கு மேல் கனகசபையில் மகா ருத்ர ஜப மகாபிஷேகம் நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா் மற்றும் பொதுதீட்சிதா்கள் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com