ராஜி
கடலூர்
பெண்ணிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணை கத்தியால் தாக்கி 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
வேப்பூா் வட்டம், ஒரங்கூரைச் சோ்ந்த பாலு மனைவி பூங்கொடி(45). இவா் திங்கள்கிழமை தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தாா். அங்கு வந்த இளைஞா் பூங்கொடி அணிந்திருந்த தங்க தாலிச் சங்கிலியைப் பறிக்க முயன்றாா். தடுக்க முயன்ற பூங்கொடியை, கத்தியால் வலது கை, தோள்பட்டையில் வெட்டி விட்டு 10 பவுன் சங்கிலியைப் பறித்துச் சென்றாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், சிறுபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், ராமநத்தம் காவல் சரகம் கீழ்கல்பூண்டியில் பதுங்கியிருந்த திட்டக்குடி வட்டம், பட்டாகுறிச்சியைச் சோ்ந்த வைத்திலிங்கம் மகன் ராஜியை (27) கைது செய்து சிறையில் அடைத்தனா்.