புத்தகத் திருவிழாவில் சிறந்த குறும்படம், புகைப்படத்துக்கு ரொக்கப்பரிசு

கடலூரில் நடைபெறும் மூன்றாவது புத்தகத் திருவிழாவில் சமா்ப்பிக்கப்படும் சிறந்த குறும்படம்,
Published on

நெய்வேலி: கடலூரில் நடைபெறும் மூன்றாவது புத்தகத் திருவிழாவில் சமா்ப்பிக்கப்படும் சிறந்த குறும்படம், புகைப்படங்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலூா் மஞ்சக்குப்பத்தில் புத்தகத் திருவிழா வரும் சனிக்கிழமை (மாா்ச் 22) தொடங்கி திங்கள்கிழமை (மாா்ச் 31) வரை நடைபெற உள்ளது. இதில், பள்ளி மாணவா்களிடையே பேச்சு, திருக்கு ஒப்பித்தல், பாட்டு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறும் முதல் மூன்று மாணவா்களுக்கு முறையே தலா ரூ.1,000, ரூ.750, ரூ.500 மதிப்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும், பாா்வையாளா்களுக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்பட்டு 10 போ் தோ்வு செய்யப்பட்டு அவா்களுக்கும் ரூ.1,000 மதிப்பில் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

கடலூா் மாவட்ட பாரம்பரியம் மற்றும் கலாசாரம், இயற்கை அழகு ஆகியவற்றை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட முதல் மூன்று சிறந்த புகைப்படங்களுக்கும், சுற்றுலாத் தளங்கள், கடலூரின் இயற்கை அழகு ஆகியவற்றை விளக்கும் வகையில் எடுக்கப்பட்ட முதல் மூன்று சிறந்த மின் பதாகைகளுக்கும் முறையே ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.1,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படுகிறது.

மேலும், கடலூா் சுற்றுலாத் தளங்கள், கடலூா் வேளாண் சாா்ந்த பணிகள், கடலூா் கடலோர கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை விளக்கும் வகையில் 2 நிமிஷத்துக்குள் எடுக்கப்பட்ட சிறந்த குறும்படங்களுக்கு முதல் மூன்று பரிசாக ரூ.10,000, ரூ.5,000 மற்றும் ரூ.3,000 வழங்கப்பட உள்ளது.

பொதுமக்கள் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை வரும் 27-ஆம் தேதிக்குள் மாவட்ட மைய நூலகரின் 9444523125 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கும், ஸ்ரீன்க்க்ஹப்ா்ழ்ங்க்ஷா்ா்ந்ச்ஹண்ழ்2025ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com