வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி: இளைஞா் கைது

Published on

கடலூா் மாவட்டம், ஆவினங்குடி அருகே வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திட்டக்குடி வட்டம், டி.செங்கமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் மனைவி குணசுந்தரி (26). இவா், ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணியளவில் தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, ஆவினங்குடி பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் அழகுதுரை (24), வீட்டினுள் புகுந்து குணசுந்தரி அணிந்திருந்த 10 கிராம் தாலி சங்கிலியை பறிக்க முயன்றாராம். இதனால், குணசுந்தரி கூச்சலிட்டதால், தப்பியோடிய அழகுதுரையை கிராம மக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து ஆவினங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அழகுதுரையை கைது செய்து சிறையிலடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com