சிதம்பரம் அருகே பெரியப்பட்டு ஐந்து கண் மதகு அருகே வயலில் கவிழ்ந்த கோழிகள் ஏற்றி வந்த மினிலாரி.
சிதம்பரம் அருகே பெரியப்பட்டு ஐந்து கண் மதகு அருகே வயலில் கவிழ்ந்த கோழிகள் ஏற்றி வந்த மினிலாரி.

சிதம்பரம் அருகே லாரி வயலில் கவிழ்ந்து விபத்து: 500-க்கும் அதிமான கோழிகள் இறந்த பரிதாபம்

Published on

சிதம்பரம்: சிதம்பரம் அருகே கோழிகள் ஏற்றி வந்த லாரி சாலையோர வயலில் கவிழுந்த விபத்தில் 500க்கும் மேற்பட்ட கோழிகள் உயிரிழந்தன.

கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிப்பேட்டையை சோ்ந்தவா் விஜய் (21) லாரி ஓட்டுநரான இவா் மினி லாரியில் 90 பெட்டிகளில் 1080 கோழிகளை ஏற்றிக்கொண்டு, சேலத்தில் இருந்து சிதம்பரத்தை அடுத்த பெரியப்பட்டு வந்துள்ளாா்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிதம்பரம் அருகே

உள்ள பெரியப்பட்டு ஐந்து கண் மதகு பாலம் அருகே வரும்போது லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் மினி லாரியில் இருந்த சுமாா் 500 க்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. தகவல் அறிந்த அப்பகுதி மக்கள், இறந்த கிடந்த பிராய்லா் கோழிகளை தங்கள் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com